கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 53.98 கன அடியாக உள்ள நிலையில், நீர்இருப்பு 20.41 டி.எம்.சி. உள்ளது. இணைக்கு வினாடிக்கு 83 கன அடியிலிருந்து 98 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாயில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
des : Water flow to Mettur dam is 1,000 cubic feet of water per second.