ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் பிரச்சனையால் தனது அனைத்து சேவைகளையும் முடக்கியுள்ளது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களும் தங்களது பணியினை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் சேவைகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று போட்டி விமான சேவை நிறுவனங்கள் அரசுக்கு வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் மத்திய விமானத் துறை செயலர் பிரதீப் சிங்க் கரோலா ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் நிறுத்தப்பட்ட 440 சேவைகள் காலியாக உள்ளன. இதில் மும்பையிலிருந்து இயக்கப்படும் 280 சேவைகளும், டெல்லியிலிருந்து இயக்கப்பட்ட 160 சேவைகளும் காலியாக உள்ளன.
Goverment allocate 440 vacant jet airways slots to other
#JetAirways