வாக்களர்களுக்கு சாராயம் கொண்டு வந்த லாரி பறிமுதல் 3 பேரை கைது செய்து விசாரணை

Oneindia Tamil 2019-04-11

Views 349

இராணிப்பேட்டை அருகே 75 இலட்சம் ரூபாய் மதிப்பிலான எரிச்சாராயத்தை கடத்தி வந்த 3 பேரை மதுவிலக்கு அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மத்தியப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இரண்டு லாரிகளில் எரிசாராயம் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் மதுவிலக்கு தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரு லாரிகளை மடக்கி சோதனையிட்ட போது அதில் 500 கேன்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17இ500 லிட்டர் எரிசாராயம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இரு லாரிகள் மற்றும் எரிச்சாரயம் கேன்களை பறிமுதல் செய்து கொண்டிருந்த போது பின்னால் வந்த காரை சோதனை இட முயன்றனர். அப்போது வேகமாக நிற்காமல் சென்ற இன்னோவா காரை பின் தொடர்ந்து சென்ற காவல்துறையினர் அதில் இருந்தவர்கள் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
The lorry who seized the voter was arrested and the three arrested

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS