அமமுக கட்சி தேனி பாரளுமன்ற தொகுதி வேட்பாளரும், பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி வேட்பாளர் இருவரும் சேர்ந்து நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் பாரளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் விருவிருப்படைந்துள்ள நிலையில் தேதலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அணல் பரக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று அமமுக கட்சியின் சார்பாக தேனி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தங்கதமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் கதிர்காமு இருவரும் இணைந்து பெரியகுளத்தில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் அதிகாலை 6 மணிக்கு நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இருவரும் நடைபயிற்சியும் மேற்கொண்டனர். நடைபயிற்சியில் ஈடுபட்ட சிலர் தங்கதமிழ்செல்வனுடன் செல்பி எடுத்துக் கொண்டு சென்றனர்.
des : They were engaged in voting for the public