ஆம்பூரில் அதிமுக கூட்டணி கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்- வீடியோ

Oneindia Tamil 2019-04-01

Views 1

வேலூர்மாவட்டம்,ஆம்பூரில் அதிமுக கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் வேலூர் பாராளுமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணியின் புதிய நீதிக்கட்சியின் வேட்பாளர் ஏ.சி சண்முகம் மற்றும் ஆம்பூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோதிராமலிங்க ராஜா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள் இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பாமக தலைவர் ஜி.கே மணி வெற்றிக்கான வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார் இதில் திரளான அதிமுக,பாமக,பாஜக தேமுதிக ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்
பின்னர் பாமக தலைவர் ஜி.கே மணி செய்தியாளர்களிடம் கூறுகையில் உற்சாகமாக இந்த கூட்டணியை சேர்ந்தவர்கள் வாக்குகளைசெய்து வருகின்றனர் இக்கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களையும் கைப்பற்றும் 18 இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி தொடரும் மத்தியில் மோடி மீண்டும் பிரதமராவார் நீர் மேலாண்மை கோரிக்கையை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கோதாவரி- காவேரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார் இதனால் பாலாறு தென் பென்னை,வைகை,தாமிரபரணி ஆகிய ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் இதற்கு 60 ஆயிரம் கோடி நிதி தேவை இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் செழுமையான மாநிலமாக மாறும் கூட்டணி கட்சியினருக்கு இரட்டை இலையிலும் பாமகவினருக்கு மாம்பழம் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் சமூக வலைதளம் என்பது சக்தி வாய்ந்த ஒன்று அதிமுக கூட்டணிக்கு வரவேற்பும் அதரவும் அதிகரித்து வருகிறது இதனை பொருத்துகொள்ள முடியாமல் திமுக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகின்றனர் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கும் பிரதமர் மோடிக்கும் எந்த தொடர்பும் காரணமுமில்லை இது தேர்தல் நேரம் என்று கூறினார்

DES : AC Shanmugam and Ampoor will contest the by-election of the AIADMK candidate Jitiramalinga Raja

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS