கூட்டு பாலியல் வன்கொடுமை காரணமாக கோவையில் 6 வயது சிறுமி உயிரிழந்து இருக்கலாம்

Oneindia Tamil 2019-03-30

Views 804

கூட்டு பாலியல் வன்கொடுமை காரணமாக கோவையில் 6 வயது சிறுமி உயிரிழந்து இருக்கலாம் என , தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு நல ஆணையத்தின் உறுப்பினர்
மோகன் தெரிவித்துள்ளார்

கோவையை அடுத்த பன்னிமடை பகுதியில்
சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இன்று தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு நல ஆணைய உறுப்பினர்கள் பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு , பேட்டியளித்த அவர் ,
பாதிக்கப்பட்ட குழந்தையின் ஆசியர்கள், காவல்துறை, மருத்துவர்கள் , ஊர் மக்கள் என 8 பிரிவினரிடம் விசாரித்ததாகவும் ,
இதில் இறந்த சிறுமி, கூட்டு பாலியல் செய்து கொலை செய்யபப்ட்டிருக்கலாம் என கூறினார். சிறுமி இதற்கு முன்பாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு எனவும் கூறினார்.மேலும் நாளை பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் முழு விவரம் தெரிய வரும் என தெரிவித்த அவர் , காவல்துறை விசாரிக்கும் நபர்களும் இருக்கலாம், இதை தாண்டியும் சில நபர்கல் இருக்கலாம் என தெரிவித்தார் . குழந்தைக்கு தெரிந்தவர்கள் மூலமாகவே அதிகம் இது போன்ற பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவதாகவும் . இது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது கூறினார்.
குற்றவாளிகளை பிடிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் , குற்றவாளிகளை பிடித்தால் அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் வலியுறுத்தப்படும் என கூறினார் மேலும் இது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
Kovai news

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS