பாபநாசத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு நடைபெற்றது. தஞ்சை பாபநாசத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வுக்கு பாபநாசம் தேர்தல் நடத்த அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பொது மக்களுக்கு வாக்களிக்கும் இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்றும், மேலும் அனைத்து பொது மக்களுக்கும் தேர்தல் விழிப்புணர்வு அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன. மேலும் மாணவ மாணவிகளிடையே 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் சம்பந்தமான விழிப்புணர்வாக கோலப்போட்டி நடைபெற்றது. இந்த கோலப்போட்டியில் பாபநாசம் தேர்தல் நடத்த இளங்கோவன் சிறப்பாக கோலமிட்ட கல்லூரி மாணவிகளுக்கு முறையே புத்தகங்களும், எழுதுகோல்களும் பரிசாக வழங்கினார்.
des : Electoral awareness among college students and the public