பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தை அடுத்து அவர் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. பேட்ட படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து கார்த்திக் சுப்புராஜுடன் மீண்டும் படம் பண்ண விரும்புகிறார் ரஜினிகாந்த். கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே வெயிட்டிங்கில் இருக்க தற்போது வினோத்தும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். இது தவிர ரஜினிகாந்த் எஸ்.எஸ். ராஜமவுலியின் படத்தில் நடிப்பார் என்றும் தகவல் வெளியாகின. ஆனால் ராஜமவுலி ஆர். ஆர். ஆர். படத்தில் பிசியாக உள்ளார்.
#Rajini
#Petta
#A.R.Murugadoss
#Rajamouli
#KarthickSubburaj