புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பறிமுதல் செய்ய்பட்டது. அறந்தாங்கி அடுத்த கேங்குடி கிராம பகுதியிலுள்ள தெற்கு வெள்ளாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டது. அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டாச்சியர் அனுமதியின்றி மணல் அள்ளிய டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இதனிடையே லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் காவல்துறையினர் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
des : Police seized the sand and the lorry was seized without permission.