சென்னை ராயபுரம் பகுதியில் உலோக சிலை பறிமுதல்- வீடியோ

Oneindia Tamil 2019-03-18

Views 556

சென்னை, ராயபுரம் செட்டித்தோட்டம் குடிசை பகுதியில், உலோகத்தால் ஆன சிலை கிடப்பதாக போலீசாருக்கு அந்த பகுதியில் வசிக்கும்
முருகம்மாள் என்பவர் தகவல் கொடுத்தார் தகவலின்பேரில் ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன் தலைமையில் போலீசார் சம்பவ
இடத்திற்கு விரைந்து குப்பை களுக்கு இடையே பிளாஸ்டிக் சாக்கு பையில் சுற்றப்பட்ட நிலையில் சுமார் 6௦ கிலோ எடை க்கொள்வது உலோக சிலையை மீட்டனர். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தியதில், அந்த சிலையை ராயபுரம் பாலம் சர்வீஸ் பகுதியில், குப்பை சேகரிக்கும் கணேசன்(25) என்பவர் சிலையை கொண்டு வந்து மறைத்து வைத்தது
தெரியவந்தது அந்த சிலையை எந்த கோவிலில் இருந்து கடத்தப்பட்டது எனவும் தலைமறைவாக உள்ள கணேசனையும் போலீசார் தேடி வருகின்றனர்,மேலும் இந்த சிலை கிடைத்தது குறித்து ராயபுரம் சிலை
கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்து பார்வையிட்ட பின்னர் அது எந்த வகை சிலை என்பதும் அதன் மதிப்பு எவ்வளவு என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Metal idol in the Royapuram area of Chennai

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS