Arya & Sayeesha Reception in chennai.
கஜினிகாந்த் படத்தில் சேர்ந்து நடித்தபோது, காதலில் விழுந்த ஆர்யா - சாயிஷா ஜோடி, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஞாயிறன்று திருமணம் செய்து கொண்டனர். ஹைதராபாத்தில் மிகவும் கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. மெகந்தி, சங்கீத் என திருமணத்திற்கு இருநாட்கள் முன்பே கொண்டாட்டம் தொடங்கி விட்டது. வண்ண வண்ண உடையில் ஆர்யா, சாயிஷாவின் திருமணக் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றதால் தமிழ்த் திரையுலகில் இருந்து சூர்யா, கார்த்தி, விஷால் என சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில், சென்னையில் இன்று அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
#Arya
#Sayeesha
#Marriage
#Chennai