லோன் தருவதாக கூறி நூதன முறையில் பாமர மக்களிடம் பண மோசடி-வீடியோ

Oneindia Tamil 2019-03-14

Views 1.4K

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் பகுதியில் உள்ள பெண்களிடம் கடந்த 9ஆம் தேதி அன்று போடி நகர் பகுதியில் சக்தி பைனாஸ் என்ற நிறுவனம் இயங்கி வருவதாகவும் 15 நபர்கள் கொண்ட குழு அமைத்தால் நபர் ஒன்றுக்கு 50ஆயிரம் ரூபாய் லோன் தருவாதாவும் அதற்கு அந்த குழு சார்பாக தான் தரும் வங்கி கணக்கில் நபர் ஒருவர் 1100 ரூபாய் வீதம் ஒவ்வோரு குழுவும் 16500 செலுத்தினால் பணம் செலுத்தினால் அன்று மாலையிலே அந்த குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு 50-ஆயிரம் ரூபாய் லோன் தருவதாக கூறியதாகவும் அதை நம்பி நேற்று முந்தினம் பெரியகுளத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் 10க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுவினர் பெரியகுளம் இந்தியன் வங்கியில் பணம் செலுத்தி உள்ளனர். பணம் செலுத்தி விட்டு மாலை முதல் குழு அமைக்க சொன்ன நபர்களின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட நிலையில் அந்த எண் சுச் ஆப் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தாங்கள் பணம் போட்ட வங்கியி அதிகாரியிடம் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கை சோதனை செய்த போது குழுவினர் போடப்பட்ட பணம் அடுத்த 5 நிமிடத்தில் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்த நிலையில் இன்று வரை 50ஆயிரம் ரூபாய் லோன் தருவதாக கூறிய நபர்களின் செல் போன் நம்பர் சுச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு லோன் தருவதாக கூறி நூதன முறையில் ஏமாற்றி சென்றுள்ளது தெரியவந்தது. இது போன்று பெரியகுளம் பகுதியில் பல கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட குழு அமைத்து பெண்களிடம் மோசடி செய்துள்ளனர். மேலும் தங்கள் ஏமாற்றப்பட்டது போன்று இவர்களிடம் பல கிராமங்களில் பெண்கள் ஏமாற்றப்பட்டாமல் இருக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

des : Money laundering for the people of the lane to claim loneliness.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS