புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம ஆண்கள் விடுதியில் இரண்டு லட்சம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி ரங்கப் பிள்ளை தெருவில் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான ஆண்கள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த ஆசிரமத்தில் கடந்த மார்ச் 26ம் தேதி மர்ம நபர் ஒருவர் விடுதி உள்ளே நுழைந்து அங்கு தங்கியிருந்த மாணவர்களின் லேப் டாப் மற்றும் 5 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து விடுதி காப்பாளர் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விடுதிக்கு சென்ற காவலர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தபோது சுமார் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கேமராவில் பதிவாகியுள்ள இளைஞர் அருளை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்தவழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு முதுநிலை கண்காணிப்பாளர் அபூர்வ குப்தா மற்றும் கண்காணிப்பாளர் மாறன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
Aurobindo Ashram men robbed the robbery and arrested the police
#Robbed
#Robbery
#Police
#Pondicherry