கதிர், சிருஷ்டி டங்கே, லகுபரண் உள்ளிட்டோர் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாக உள்ள படம் சத்ரு. நவீன் நஞ்சுண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். கதிர் இதில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சத்ரு ரிலீஸ் வேலை, தளபதி 63 படப்பிடிப்பு என பிஸியாக இருந்த கதிரை ஒன்இந்தியாவுக்காக சந்தித்தேன். அவருடன் உரையாடியதில் இருந்து. "சத்ரு ஒரு க்ரைம் திரில்லர் படம். போலீசுக்கும், திருடனுக்கும் இடையே நடக்கும் ஆட்டம்தான் படம். முதல் காட்சியில் இருந்து படம் விறுவிறுப்பாக இருக்கும். சிருஷ்டி டங்கே இதில் எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். வில்லனாக லகுபரண் நடித்துள்ளார்.
#Vijay
#Kathir
#Sathru