கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான பொருட்களை மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் சீர்வரிசையாக வழங்கினர். 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீரோ, நாற்காலிகள், மின் விசிறிகள், பேனா, பென்சில் மற்றும் எழுது பொருட்கள் விளையாட்டு உபகரணங்கள், உள்ளிட்ட பொருட்களை பெற்றோர் ஊர்வலமாக எடுத்துச் சென்று பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர். குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க வேண்டி பள்ளிக்கு இவ்வுதவியை செய்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.