குழந்தையை மீட்டு தாருங்கள்...கர்ப்பிணி தாயின் பாசப்போராட்டம்

Oneindia Tamil 2019-01-15

Views 1.7K

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த வாணியம்பேட்டை பகுதியை சேர்ந்த வனிதா இவருக்கும் நாகவேடு பகுதியை சேர்ந்த மனிகண்டன் என்பருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் 3 வயதில் நிதீஸ் பாலாஜி என்ற ஒரு மகன் உள்ளான். கடந்த டிசம்பர் மாதம் மணிகண்டன் உடல்நிலை சரியின்றி காலமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வனிதா தன்னுடைய 3 வயது மகனை கணவர் குடும்பத்தார். தனக்கு காண்பிக்காமல் இருப்பதாகவும் தன்னுடைய குழந்தையை மீட்டு தரும்படி அரக்கோணம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் முறையிட்டார். குழந்தையை மீட்டு தர முடியாது என்று அலட்சியமாக கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து 5 மாத கர்ப்பிணி பெண்ணான வனிதா தன் குழந்தையை மீட்டு தரும் வரை காவல் நிலைய முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். நிலையை புரிந்துக்கொண்ட காவல் துறையினர் உடனடியாக கணவ்ர் குடும்பத்தாரை அழைத்து குழந்தையை மீட்டு தந்தனர். இறுதியாக கர்ப்பிணி தாயின் பாசப்போராட்டம் வெற்றி பெற்றது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது
Repeat the baby ... Pregnant mother's fatigue

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS