ஓட்டுரிமை உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை- சேலத்தில் மக்கள் கோரிக்கை- வீடியோ

Oneindia Tamil 2019-01-11

Views 547

பொங்கல் பரிசு அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுவதற்கு தடைவிதிக்க கோரி வழக்கு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.மேலும் இது என்ன உங்கள் கட்சியின் பணமா ? பொது மக்களின் வரிப்பணம் உயர்நீதிமன்றம் என்றும் கேள்வி எழுப்பியது.ஏழை மக்களுக்கு வழங்கப்படுவதற்கு நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் அனைத்து வசதி படைத்தவர்களுக்கும் இந்த 1000ருபாய் சேருகிறது.இது அரசின் கொள்கை முடிவு என்பதை அரசு சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது மற்றும் சாலை உள்ளிட்ட பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த அரசு என்ன செய்தது என்று உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில் சேலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால் சிறிது நேரம் சில ரேஷன் கடைகள் பரபரப்பாக காணப்பட்டது. பிறகு அனைவரையும் வரிசையில் நிற்க வைத்து டோக்கன் வழங்கப்பட்டது. பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பணம் வழங்கும் பணி துவங்கியது. பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது என்பது பொது மக்களுக்கு தகவல் தெரிந்தவுடன் பொதுமக்கள் குவிந்தனர்.



Des : People in the Pongal Gift for Tailoring...

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஓட்டுரிமை உள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றும், நிறுத்தினால் இலவசங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் கூறினர். இரண்டு நாட்களாக தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வரிசையில் நின்று கொண்டிருக்கிறோம். பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசுத் இத்தொகையை வாங்காமல் செல்ல மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.


Des : People in the Pongal Gift for Tailoring...

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS