சேலம் மாவட்டம்,ஓமலூர் அருகே 10க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது.நாய்களை விஷம் வைத்து கொலை செய்த கும்பல் ஆடுகளை திருடி சென்றுள்ளதால் தொளசம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனால்,கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும்,
ஓமலூர் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் மஞ்சுளாயூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலோனோர் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலும் செய்து வருகின்றனர்.இந்நிலையில் இங்கு மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.மேலும் இந்த ஆடுகளுக்கு பாதுகப்பாக இங்குள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டு நாய்களை வளர்த்து வருகின்றனர்.இந்த நாய்கள் கிராமத்திற்குள் புதிய ஆட்கள் நுழைந்தாலே அதிக சத்தத்துடன் குறைத்து விரட்டி வந்துள்ளது. இந்தநிலையில் இந்த கிராமத்தில் கடந்த ஒருவார காலமாக ஆடுகள் திருடு போயியுள்ளது.ஒரே வாரத்தில் நன்கு வளர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போய்விட்டது. இதனை தடுக்க நாய்களுக்கு பயிற்சி அளித்திருந்த நிலையில் நேற்றிரவு ஆடுகளை கொள்ளையடிக்க வந்த கும்பல் நாய்களுக்கு விசத்தை கலந்த உணவை கொடுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் நாய்கள் துடிதுடித்து இறந்த பிறகு சுமார் ஐந்து ஆடுகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால், அதிர்சிக்குள்ளன கிராம மக்கள் நடந்த சம்பவம் குறித்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிராமத்தை ஆய்வுகள் செய்தனர். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் இருந்த நாய்களுக்கு தனித்தனியாக விச உணவை கொடுத்து கொலை செய்துள்ளனர். அதன்படி இந்த கிராமத்தில் குழந்தையை போல வளர்த்து வந்த பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், கிராமத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட நாய்களை காணவில்லை. அதனால், அந்த நாய்கள் கொள்ளையர்களை விரட்டி செல்லும்போது அங்கே இறந்திருக்கலாம் என்று விவசாயிகள் கூறினர்.இதனை தொடர்ந்து நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு ஆடுகளை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை தொளசம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.நாய்கள் கொலை செய்யபட்டிருப்பது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
DES : Poisoning gangs for dogs