நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கீழையூர் கடைத் தெருவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக காரை மீட்டுச் செல்லும் மீட்பு வாகனத்தில் டாட்டா இன்டிகா வாகனத்தை இழுத்துக் கொண்டு வந்தது.விபத்துக்குள்ளான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் இந்த வாகனத்தை நீண்ட தூரம் இழுத்து வந்ததை கண்டு சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டபோது வாகனத்தில் 6 மூட்டைகளில் சுமார் 142 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது உடனடியாக மீட்பு வாகனத்தில் வந்த ஓட்டுநர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த சிலம்பரசன் கைது செய்யப்பட்டார் .கஞ்சா கடத்தலில்ஈடுபட்ட உரிமையாளர் மதுரையை சேர்ந்த ஆனந்தனும் கைது செய்யப்பட்டனர் இவர்கள் இருவர் மீதும் வழக்கு செய்யப்பட்டு எங்கிருந்து கஞ்சா கடத்தப்பட்டது குறித்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் .விசாரணை செய்ததில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது ஆந்திரா நம்பர் பிளேட் இரண்டும் அந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது கஞ்சா படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Des: Two persons detained in Kanjana are arrested