பூவிருந்தவல்லி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லோட் வேன் தீப்பற்றி எரிந்து,ஓட்டுனர் உடல் கருகி உயிர் இழந்த சம்பவம் காவல்துறையினர் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூவிருந்தவல்லி அடுத்த பாப்பான்சத்திரம் கிராமத்தில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டுருந்த மஹேந்திரா லோட் வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீப்பற்ற துவங்கியது.பின்னர் தீயிலிருந்து கருகிய நிலையில் சபரி மலைக்கு மாலை அணிந்து இருந்த ஒருவர் சடலமாக கீழே விழுந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க போராடினர். உடனடியாக தீயணைப்பு நிலையம் ,காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பூவிருந்தவல்லி தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனம் மூலம் தீயை அனைத்தனர். தீவிபத்தில் வாகனம் முற்றிலுமாக எரிந்ததால் உயிர் இழந்தவர் யார்,எந்த பகுதியை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை.வாகனத்திம் பதிவு எண்ணை கொண்டு நசரத்பேட்டை காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உயிர் இழந்தவர் மர்மான முறையில் உயிர் இழந்து இருப்பது காவல்துறையினர் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக வாகனத்தில் இருந்து கருகிய நிலையில் கீழே விழுந்தவர் க்ளீனர் சீட் பக்கம் இருந்து விழுந்துள்ளார். இதனால் வாகனத்தை ஓட்டி வந்தவர் தப்பிக்க க்ளினர் பக்கமாக வந்தாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்துவிட்டு தப்பி செல்ல வாகனத்தில் தீவைத்து சென்றனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் எரிந்த வாகனம் ஜானகிராமன் என்பருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது.
DES : Lot van burns fire and burns