நிவாரணத்தில் கூட கமிஷன் அடிக்க நினைக்கும் இந்த அரசாங்கத்தை என்ன சொல்வதென்று தெரியவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு அறிவித்த நிவாரணம் தொகையானது மிக அற்பமான குறைவான தொகையாகும் இதன் காரணமாகவே பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே கொந்தளிப்பும் பதட்டமும் ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்றால் வீடுகளை இழந்த மக்களின் எண்ணிக்கையை கணக்கிட வரும் அரசு அதிகாரிகள் முழுமையாக கணக்கிடக் கூடாது என்றார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜமுக்காளங்களை வழங்க கைத்தறி அமைச்சர் ஓ எஸ் மணியன் கூட்டுறவு அமைப்புகளில் இருப்பு இருந்தும் கொள்முதல் செய்யாமல் தனியார் அமைப்புகளில் கொள்முதல் செய்வது ஏன் ? என்றும் கேள்வி எழுப்பினார் இந்த நிவாரணத்தில் கூட கமிஷன் அடிக்க நினைப்பது ஏன் இந்த அரசாங்கத்தை என்ன சொல்வதென்று தெரியவில்லை என்றார்.
Des: Communist Party of India Secretary Mutharasan said that this government does not know what to say, even in relief.