சேலம் சங்ககிரியில் குழந்தையை இடுப்பில் கட்டி, கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள தேவண்ண கவுண்டனூர் கள்ளுக்கடை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (34). இவரது மனைவி அன்புக்கரசி (31). பத்து வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. அம்பிகா(4) என்ற அந்த குழந்தையுடன் வசித்து வந்தனர். மாங்காய் வியாபாரம் செய்து வந்த செல்வத்திற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இது தொடர்பாக அன்புக்கரசிக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
Des:The female suicide is tied to the waist