மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வேலம்மாள் மருத்துவ கல்லூரி சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக "புற்று நோய் உதவிக் குழுமம் " துவங்கப்பட்டது.
இதில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை கெளதமி கலந்துகொண்டு புற்றுநோய் குறித்து பேசினார்.நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை வேலம்மாள் மருத்துவ கல்லூரி புற்றுநோய் துறை Dr. ராஜ்குமார் செய்திருந்தார்.
மேடையில் பேசிய நடிகை கெளதமி அவர்கள் கூறும்போது தமிழ்நாடடின் வரலாற்றில் மிக முக்கியமான இன்று எல்லாருமே எடுக்கக்கூடிய முடிவுகள்தான் நம்முடைய எதிர்காலம் இல்லை அடுத்த தலைமுறைக்கான தீர்மானம் நிர்ணயிக்கப்படும்.அரசியல்ரீதியாக கூட கூறுகிறேன் அரசியல் வந்து நம்ம எல்லாருக்கும் சேர்ந்தது நமக்கு எல்லோருக்கும் சொந்தமானது இது தனிப்பட்டது கிடையாது.எதற்காக அரசியல் பேச்சு எடுத்து இருக்கேன் என்று நினைக்கிறீர்களா ஏனென்றால் நம் உடல் நோயற்று அது சரி செய்து முடிக்கும் வரை அனைத்தும் மேற்கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு என கூறினார்.செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:புற்றுநோய் என்று வந்து எந்த அளவுக்கு பரவியுள்ளது எந்த சதவீதம் உள்ளது இருந்தது என்று கூறினால் போதாது.ஏனென்றால் புற்று நோய் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் கூறுவது கிடையாது. ஏனென்றால் புற்று நோய் வந்தவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அடையும் வேதனைகள் எவ்வாறு மனமுடைந்து போகிறார்கள் அதனால் சதவீதக் கணக்கில் எடை போட முடியாது.புற்றுநோயை எதிர் கொள்ள முடியாதது என்பது எதுவும் கிடையாது புற்றுநோயை எதிர்கொள்ள முடியும் அதை சரி செய்யவும் முடியும்.இதற்கு விழிப்புணர்வு என்பது மிகவும் முக்கியம் ஒரு விஷயத்தை முன்பே தெரிந்தால் நாம் கவனமாகவும் பத்திரமாகவும் இருப்போம்.இன்று நான் இங்கு இருக்கிறேன் என்றால் எல்லாருக்கும் தெளிவாகப் பேச முடிகிறது என்றால் என்னுடைய புற்றுநோயை நான் தேடி போய் இருந்தேன். தான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற புரிதலுடன் என் உடலை நான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் எனது உடலை சுயபரிசோதனை செய்து கொண்டேன். அவ்வாறு சுயபரிசோதனை செய்து கொண்டபோது எனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது அதன்பின் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்து நோயிலிருந்து விடுபட்டேன்.
des:Actress gothamthi has said that the state is responsible for all that it should do until our body is properly diagnosed