மருந்தக உரிமையாளரை தாக்கி 9.50 லட்சம் வழிப்பறி செய்த கொள்ளையர்களை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பூர் இடுவாய் பகுதியில் வசித்து வரும் கேசவன் (28) என்பவர் கணியாம்பூண்டியில் செல்லம் மெடிக்கல் என்ற பெயரில் மொத்த மருந்து வணிகம் மற்றும் மணி ட்ரான்ஸ்பர் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு கடையை அடைத்து விட்டு கடையில் இருந்த 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு இடுவாய் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின் தொடர்ந்து காரில் வந்த 4 பேர் பாரதிபுரம் அருகே கேசவனை வழி மறித்து கடுமையாக தாக்கிவிட்டு அவர் கொண்டு சென்ற 9 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதில் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த கேசவன் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பவம் குறித்து மங்கலம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Des: Police have been searching for 9.5 lakh robbers who attacked the pharmacy owner.