கந்துவட்டி கொடுமை..பெண் தூக்கிட்டு தற்கொலை.. பரோட்டா மாஸ்டர் கைது-வீடியோ

Oneindia Tamil 2018-11-22

Views 1.2K

தருமபுரி ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த மைதிலி தனியாக பழைய இரும்பு பேப்பர் கடை நடத்தி வந்துள்ளார். இவரின் பணத்தேவைக்காக தருமபுரி டவுன் காந்திநகரைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் பழனி என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடனாக பெற்று உள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் கடந்த இரு மாதங்களாக வட்டி செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில் கந்துவட்டி பழனி தனக்கு நெருக்கமானவர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் மாதச் சீட்டு கட்டுட சொல்லி மைதிலியை நிர்பந்தம் செய்துள்ளார். மைதிலியும் ஒரு லட்ச ரூபாய் மாத சீட்டை கட்டியுள்ளார். மாத சீட்டாக மைதிலி கட்டிய ஒரு லட்ச ரூபாயில் பழனி 80ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளார்.இருப்பினும் தொடர்ந்து தனக்கு வட்டித் தொகை செலுத்த வேண்டும் என மைதிலியை கொடுமைப்படுத்தியுள்ளார். மைதிலி வாங்கிய பத்தாயிரம் ரூபாய்க்கு 80 ஆயிரம் ரூபாய் கட்டியும் தொடர்ந்து பழனி தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த மைதிலி தனது தாய் வீட்டிற்கு வந்து இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கந்துவட்டி கொடுமைப்படுத்திய பழனியை தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Des: Pattu Thaukkittu suicide .. Parata Master arrested

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS