ஒடிஷாவில் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து நீர் இல்லா ஆற்றில் விழுந்ததில் 12 பேர் பலியாகினர், 49 பேர் காயம் அடைந்தனர். ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் தால்சர் பகுதிக்கு சென்றது. ஜகத்பூர் அருகே உள்ள பாலத்தில் சென்றபோது எருமை மாடு எதிரே வர டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் சுவரில் மோதி மகாநதி ஆற்றுப்படுக்கையில் விழுந்தது