நிமோனியா காய்ச்சலால் கணவன் மனைவி பலியான சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தை சேர்ந்த நகை செய்யும் கூலித் தொழிலாளி அரி அவருடைய மனைவி ரோஜா இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.இவர்கள் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் வந்தனர்.பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.இவர்களுடைய உடல்கள் தற்போது முங்கப்பட்டு கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது .மருத்துவ பரிசோதனையில் இவர்கள் இருவருக்கும் நிமோனியா காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இதன் காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.மேலும் காய்ச்சல் பரவாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Des: People in the area are scared by the death of husband and wife with pneumonia