கஜா புயலால் தேர்தல் தள்ளிப் போகிறதா அல்லது அரசியல் புயலால் தேர்தல் வரப்போகிறதா என பொருத்திருந்து பார்ப்போம் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜ் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் அதிகரித்து கொண்டே போகிறது நிறைய உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் தமிழக அரசு தீவிர முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.என்றும் நியாயமாக நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் நடைபெறவேண்டும் அது நடைபெறுமா நடைபெறாத என்ற நிலையே உள்ளது, 20 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவேண்டும் அதற்கு மழை அதிகமாக பெய்கிறதா வெயில் அதிகம் அடிக்கிறதா என்பது எங்களுக்கு தெரியவில்லை,கஜா புயலால் தேர்தல் தள்ளிப்போக போகிறதா அல்லது அரசியல் புயலால் தேர்தல் வரப்போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.இந்த சந்திப்பின் போது மாநில பொது செயலாளர் மோகன் கார்த்திக்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர்,மாவட்ட செயலாளர் ரவிக்குமார் உற்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Des: GK Vasan, leader of the Tamil Nadu Congress Party, said that if the election will be postponed by the Ghazi storm or the political storm will come,