6 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த ஐடிஐ மாணவர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளார்
அரியலூர் மாவட்டம் ஆங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த். இவர் அரியலூரில் உள்ள அரசு ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சிறுமி சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஐடிஐ மாணவன் வசந்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Des: ITI student arrested for sexually abusing a 6 year old girl