தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கிய பாட்டியை நண்பன் பட பாணியில் இரு இளைஞர்கள் காப்பாற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மையப் பகுதியில் காசாங் குளத்துக்கு சின்னபொண்ணு (62) சென்றுள்ளார். அவர் கால் தவறி குளத்தில் விழுந்து விட்டார். அப்போது அவரை காப்பாற்றுவதற்கு அங்கு யாரும் இல்லை.