குட்டியானை கால் இடரி தவறி விழுந்து இறந்தது காப்பாற்ற முயன்ற தாய் யானையும் இறந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள பாலாறு-பொருந்தலாறு அணை பகுதியில் 24ஆம் தேதி காலையில் எட்டு 45 மணிக்கு காப்புக்காடு காட்டு கொண்டான் ஓடை பகுதியில் இரண்டு யானைகள் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. காட்டு கொண்டான் ஓடை பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானையும் அதனுடைய குட்டி யானை ஆண் குட்டியும் பாறைச் சரிவில் கால் இடரி மேலிருந்து கீழே 150 அடி பாறைச் சரிவில் கால் இடரி விழுந்த ஆண் குட்டி காட்டு யானையை காப்பாற்ற முயன்ற தாய் யானையும் பலியானது.12 வயது தாய் யானை பாறைச் சரிவில் விழுந்து தலையில் அடிபட்டு இரண்டு யானைகளும் இருந்தன. அரசு கால்நடை உதவி மருத்துவர் மருதபாண்டி கால்நடை மருத்துவர் முத்துச்சாமி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் மற்றும் மாவட்ட வன உயிரின காப்பாளர் தேஜஸ்வி தமிழ் யானைகள் பராமரிப்புக் குழு உறுப்பினர் பழனி வனச்சரக கணேஷ் ராம் மற்றும் வனப் பணியாளர்கள் 4 மணி நேரம் நடந்து இறந்த யானையின் உடலை மீட்டு உடற்கூறு செய்தனர் காட்டு யானைகள் அதை பரிதாபமாக பார்த்து விட்டு அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. .
Des: The mother of an elephant who tried to save the fallen kuttiani fell dead and died.