தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டமிட்டு ஆட்சியாளர்களால் செயற்கையாக வறட்சியை உருவாக்கியிருக்கிறார்கள் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டியுள்ளார்
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.இதில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் .காந்திமதி நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பிற கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், தமிழ்நாட்டில் தேவை இல்லாமல் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரவதாகவும், நேற்றைய தினம் நாகை மாவட்டம் தலைவாசல் கிராமத்தில் ராமமூர்த்தி என்கிற விவசாயி தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பது வேதனை அளிக்கிறது. இந்த சாவுக்கு முழு பொறுப்பும் தமிழக பொதுப்பணித்துறை பொறுப்பேற்க வேண்டும் என்றார்.தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டமிட்டு ஆட்சியாளர்களால் செயற்கையாக வறட்சியை உருவாக்கியிருக்கிறார்கள் என்றார். கரைபுரண்டு வந்த தண்ணீரை கடலுக்கு சென்றது ஆனால் ஏரி, குளம், குட்டைகளில் உள்ள மணலை விற்பதற்காக அவற்றை நிரப்ப பொதுப்பணித்துறை தவறிவிட்டது என குற்றம்சாட்டினார்.
Des: Tuticorin district has organized artificially drought by the rulers.