சேலத்தில் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் அளவு குறைந்து அடித்து ஏமாற்றிதாக கூறி வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்கில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
சேலம் நான்கு ரோடு அருகே ராமகிருஷ்ணா சாலையில் சக்தி ப்யூல்ஸ் என்ற பெட்ரோல் பங்க் பங்கு உள்ளது.இங்கு சேலம் பிள்ளையார் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் தனபால் என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் பெட்ரோல் அடிக்க வந்தார். 50 ரூபாய்க்கு பெட்ரோல் அடிக்க 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர் 250 ரூபாய் மட்டும் மீதியை கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த தனபால் 50 ரூபாய்க்கு பெட்ரோல் அடிக்க சொன்னேன், 250 ரூபாய்க்கு அடிக்க சொல்லவில்லை ஐம்பது ரூபாய்க்கு பெட்ரோல் அடுத்துவிட்டு, இருநூறு ரூபாய் ஏமாற்றுகிறாய் என சத்தமிட்டுள்ளார்அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர் 250 ரூபாய்க்கு தான் பெட்ரோல் அடித்துள்ளதாக தெரிவித்தார். இதில் கோபம் அடைந்த தனபால் தனது வண்டியில் இருந்த பெட்ரோலை கேனில் நிரப்பி பார்த்தார் அதில் 50 ரூபாய்க்கு உரிய பெற்றோல் மட்டும் இருந்தது தெரிய வந்தது.பின்னர் அவர் அவரது உறவினர்கள் நண்பர்களிடம் இது குறித்து தெரிவித்து, பின்னர் பொதுமக்கள் துணையுடன் தனபால் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டார். இந்த முற்றுகையால் பெட்ரோல் அடித்துக் கொண்டிருந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் இந்த பெட்ரோல் பங்கில் தினசரி பெட்ரோல் அடிக்கும் பொது மக்களும் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் பொதுமக்களும், தனபாலும், பெட்ரோல் பங்க் உரிமையாளர் நேரில் வர வேண்டும் அப்போதுதான் கலைந்து செல்வோம் என்று தெரிவித்தனர். இதை அறிந்த அஸ்தம்பட்டி காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Customers have been fiercely involved in petrol, claiming that petrol was cheated by consumers in petrol