கமலஹாசனை பார்ப்பதற்கு தொண்டர்படை வாகனத்தில் ஏறிய ரசிகர் மீது தாக்குதல் நடத்தபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது . திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் மேற்கொண்டு வருகின்றார். கமலஹாசன் வருகைக்கு முன்னர் கூட்டம் அலைமோதியதால் போலீசார் சிறு தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர்.மேலும் கமலஹாசனின் வாகனம் வரும் பொழுது அவரது வாகனத்திற்கு முன்பு வந்த தொண்டர்படை வாகனத்தில் கூட்டத்தில் இருந்த நபர் கமலஹாசனை பார்க்க வானகத்தில் ஏறினார் அதனை தொடர்ந்து கமலஹாசனின் பாதுகாப்பு தொண்டர்கள் அவரை தாக்கியும் குண்டுக்கட்டாக கீழே இறக்கி விட்டனர்.மேலும் அந்த நபரை காவல்த்துறையினர் தடியால் அடித்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து காரில் நின்றபடி இரண்டு கைகளை விரித்தவாறு நன்றியை கூறிக்கொண்டு சென்றார்.
The incident took place in the aIIack on a fan in a volunteer vehicle to watch Kamalasan.