டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. தலித் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே இந்த இடத்தை பா.ஜ.க தேர்வு செய்துள்ளதாகத் கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தேசிய குடிமக்கள் பதிவேடு, பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து அளித்தது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து செயற்குழுவில் ஆலோசிக்கப்பட உள்ளது