காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் பழனிசாமி நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக நீர்வளத்தறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்ப்பதற்காகவே, மேகதாதுவில் அணை கட்டுவதாக கூறினார். இதற்காக மத்திய நீர்வள ஆணையத்தை முறைப்படி அணுகி உள்ளதாகவும், இதில் நீர்வள ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.