கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்து சங்கிலிரோடு பகுதியில் நேற்றிரவு சுமார் 10 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. பின்னர் அங்குள்ள தேவாலயத்தை இடித்து சேதபடுத்தி அருகில் உள்ள மளிகை கடையை இடித்து அரிசிமூட்டை, பருப்பு மூட்டை, சோப்பு பெட்டி ஆகியவற்றை வெளியே இழுத்து வீசின. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ளவர்கள் யானைகளை விரட்டி அடித்தனர்.