தண்ணிர் தேடி சென்ற வாலிபர் தண்ணிரில் மூழ்கி பலியான சம்பவம்
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குமாரவாடி பகுதியில் நிலவி வரும் கடுமையான வறட்சியால் தண்ணீர் இன்றி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வரும் நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தண்ணீரைத் தேடி தினமும் அலையும் நிலை உள்ளது.துணி துவைக்க, குளிக்க மற்றும் பல்வேறு தேவைகளுக்கும் அருகில் வண்ணான்பாறை என்ற இடத்தில் செயல்படாத குவாரியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் குவாரியில் துணி துவைத்து விட்டு குளிக்கச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (வயது 40) என்பவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயற்சி செய்தும் கூட நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு துறையினர் இறந்தவரின் உடலை மீட்டனர். இதையடுத்து வையம்பட்டி போலீசார் ஆரோக்கியசாமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடுமையான வறட்சியால் தான் இதுபோன்று தேங்கி நிற்கும் நீரைக் கூட பயன்படுத்தும் நிலையில் குவாரிக்கு சென்று தங்களின் தேவையை பூர்த்தி செய்யும் நிலையில் தான் இப்படி ஆரோக்கியசாமி உயிரிழந்துள்ளார். ஆகவே அதிகாரிகள் விரைந்து தடையின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Des : The victim was drowning in the water in search of the victim