நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரெயில்!..பயணிகள் அவதி- வீடியோ

Oneindia Tamil 2018-09-04

Views 253

தொழிற்நுட்ப கோளாறு காரணமாக மின்சார ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் தென்மாவட்டங்களை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நடு வழியில் நிறுத்தப்பட்டன



சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு நேற்று காலை மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. காலை செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே சென்றபோது கேபின் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து மின்சார ரெயிலை டிரைவர் நடுவழியில் நிறுத்தினார். மேலும் தொழிற்நுட்ப கோளாறு குறித்து செங்கல்பட்டு ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சென்னை நோக்கி வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், மற்றும் மின்சார ரெயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதேபோல் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நடு வழியில் நிறுத்தப்பட்டனஇந்த தொழிற்நுட்ப கோளாறு காரணமாக மின்சார ரெயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில்களில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் பஸ்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த கோளாறு காரணமாக அந்த வழித்தடத்தில் சென்ற ரெயில்கள் தாமதமாக சென்றன.



Des : Express trains have been halted in the middle of the highway due to technical difficulties being halted by the electric train.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS