திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொண்டு பேசினார், அப்போது, நான் தியாகி அல்ல. ஆனால் நான் ஓபிஎஸ் போல துரோகியல்ல என தெரிவித்தார். நான் முதல்வராக வேண்டுமென ஆசைப்பட்டிருந்தால் செப்டம்பர் 1 ம் தேதியே முதல்வராகியிருக்க முடியும் என அவர் தெரிவித்தார்.