புதுச்சேரியில் சிறப்பு ஒலிம்பிக் பாரத் என்ற தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் நேற்று முன்தினம் சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த பெண்கள் நெட்பால் போட்டி தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த மூன்று அணிகள் பங்கேற்று விளையாடின. இதில்14 வயதில் இருந்து18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் போட்டியில் 5 அறிவுசார் குறைபாடுள்ள நபர்கள் மற்றும் 4 பெண் வீரர்கள் என ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 9 பேர் இடம்பெற்று விளையாடினர்.