குயின்ஸ்லாந்து பகுதியில் கார்பட் வகையைச் சேர்ந்த இரு மலைப்பாம்புகள் அருகில் இருந்த வனாந்திரப் பகுதியில் இணை சேர்ந்து நடனமாடின. பிரிஸ்பேன் நகரத்தைச் சேர்ந்தவர் டோனி ஹாரிசன் என்பவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். ஆண் மற்றும் பெண் பாம்புகள் இணைந்து விளையாடினால் இனச்சேர்க்கைக்கான அறிகுறி என்றும், இரு ஆண் அல்லது இரு பெண் பாம்புகள் இணைந்தால் தங்கள் ஆளுமையைக் குறிக்கும் என டோனி தெரிவித்தார்.