அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர் கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் கட்சியினர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதுடன் சேர்கள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு….
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வரும் ஆகஸ்ட் 26 ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு டிடிவி தினகரன் வருகைதருவதையொட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அம்மா முன்னேற்ற கழக உறுப்பினர்கள் இரு பிரிவினர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. கட்சியினர்களுக்கு இடையே வாய்தகறாறு கைகலப்பாக மாறியது. பின்னர் மண்டபத்தில் இருந்த சேர்களை எடுத்து ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் ஒரு நிர்வாகிக்கு மண்டையும் உடைந்தது. இச்சம்பவத்தால் மண்டபம் பகுதியே போர்களமாக காட்சியளித்தது. பின்னர் போலீசார் மண்டபத்திற்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.