மக்களுக்காக நாங்கள்: தம்பிதுரை பேட்டி

Oneindia Tamil 2018-08-18

Views 664


கேரளா மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட அதிகப்படியான உபரிநீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்ட நீரும் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்ட நீரும் காவிரியில் ஒன்றாக சேர்ந்துள்ளது. அனைத்தும் ஒன்றாக சேர்ந்துள்ளதால் 2 லட்சம் கன அடி நீருக்கு மேலாக கரூர் பகுதியில் உள்ள சாலையில் ஓடுகிறது. இதனால் தவிட்டுப்பாளையம் காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொது மக்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். தவிட்டுப்பாளையம் பகுதியில் ஆற்றுநீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

A large surplus that has been opened from Kerala and Karnataka dams is coming to Cauvery.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS