தமிழக ஆற்று கரையோர மக்களுக்கு மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து, 2.1 லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 நாட்களில் அந்த நீர் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Central water commission, releases fresh warning, for Cauvery riverbed people of Tamilnadu.