காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மனமுடைந்த காதல் ஜோடிகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த வள்ளிபுரம் ஆனூர் பாலாற்று பகுதியில் வாலிபரும், இளம்பெண்ணும் பிணமாக கிடைந்துள்ளனர். அவர்கள் அருகில் விஷபாட்டில் கிடந்ததுள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருக்கழுகுன்றம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் எலுமிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த பிரதீப்ராஜ் மற்றும் சவுமியா என்பது தெரிய வந்தது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பின்னர் தான் பிரதீப்ராஜும், சவுமியாவும் பாலாற்று பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. பிரதீப்ராஜ் பேண்ட் மியூசிக்கராவார். சவுமியா பிளஸ்-2 முடித்துள்ளார். இதுகுறித்து திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Des: If the parents oppose their love, the police are conducting investigations into the tragedy of the sad couple who committed suicide.