காவிரி ஆற்றில் அதிகப்படியாக தண்ணீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுமக்கள் அதிகம் குளிக்கும் இடங்களில் பயிற்சி பெற்ற காவலர்கள் பணியில் உள்ளதாகவும் கூறினார். தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தினார்.