ராமநாதபுரம் அருகே அண்ணாமலைநகரில் ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் முதலாம் ஆண்டு ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
ராமநாதபுரம் தேவிபட்டினம் அருகே அண்ணாமலைநகரில் ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் முதலாம் ஆண்டு ஆடித்திருவிழா கடந்த 31.7.118ல் காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் பிள்ளையார் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் இரவு முளைப்பாரி எடுத்தும் வந்தனர். இரவில் கும்மிபாட்டு, ஒயிலாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
Des : Sri Madani Amman Temple at Annamalai Nagar, near Ramanathapuram, was the first year of the Aadi festival.