சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய இளைஞரின் பைக் சாவியை போலீஸார் பறித்ததால் அச்சமடைந்த இளைஞர் அடையாற்றில் குதித்ததால் உயிரிழந்தார். சென்னை அடையாறு பாலத்தின் அருகே போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவ்வழியாக பைக்கில் சென்றுள்ளார்.