ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டில் தாக்குதல் நடத்த நடந்த முயற்சியை முறியடித்த பாதுகாவலர்கள், சந்தேகிக்கும் நபரை சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று கார் ஒன்றில் ஒரு நபர், பரூக் அப்துல்லா வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றார். அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் தடுத்தும் நிறுத்தாமல் உள்ளே நுழைந்ததால் பாதுகாப்பு போலீசார், சுட ஆரம்பித்தனர். இதில் அவர் உயிரிழந்தார்.